search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை மாநகராட்சி
    X
    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சியில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஊழியர்கள் தேர்வு

    சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஊழியர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அதன்படி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களே இனி சென்னை மாநகராட்சி ஊழியர்களாக பணியாற்ற முடியும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு 805 இடங்கள் காலியாக உள்ளன.

    காலி பணியிடங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக புதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில், இதற்கான புதிய ஊழியர்களை விரைவில் நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    இதுவரை சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கான காலி இடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட்டன. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

    தற்போது சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஊழியர்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர். அதன்படி டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களே இனி சென்னை மாநகராட்சி ஊழியர்களாக பணியாற்ற முடியும்.

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் காலியாக உள்ள 805 பணியிடங்களில் 98 உதவி பொறியாளர்கள், 83 லைசென்ஸ் ஆய்வாளர்கள், 53 டைப்பிஸ்டுகள், 35 வயர்மேன்கள் நியமிக்கப்பட உள்ளனர். இது தவிர 100 உதவியாளர்கள், 127 துப்புரவு ஆய்வாளர்கள், 113 மகப்பேறு பிரிவு உதவியாளர்கள், 41 சுகாதார ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

    இது குறித்து மாநகராட்சி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “பதவிக்கு ஏற்ப தகுந்த வயது உள்ளவர்களுக்கும், புதிதாக கல்லூரியை முடித்தவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

    Next Story
    ×