search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி பேசிய காட்சி.
    X
    முதல்வர் பழனிசாமி பேசிய காட்சி.

    விரைவில் நல்ல செய்தி வரும்: முக ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி பதில்

    சட்டசபையில் காவிரி டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று காவிரி டெல்டா பகுதி வேளாண் சிறப்பு மண்டலம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசியதாவது:-

    டெல்டா பாசன விவசாயிகள் டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

    அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து அதை ஏற்று அண்மையில் தலைவாசலில் நடைபெற்ற புதிய கால்நடை பூங்கா தொடக்க விழாவில் நான் பேசும் போது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன்.
    முக ஸ்டாலின்

    இது சம்பந்தமாக சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், விரைவில் ஒரு நல்ல செய்தி வெளியிடப்படும்.

    பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டவுடனேயே அதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டது. சரியான முறையில் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்துதான் இதை கொண்டு வர முடியும்.

    இல்லையென்றால் அதில் பல பிரச்சினைகள் ஏற்படும். எனவே விவரமாக சட்ட வல்லுனர்களுடன் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு என்னென்ன அதிகாரம் கிடைக்க வேண்டுமோ அதை செய்து முடிக்கத்தான் நாங்கள் முயற்சி செய்கிறோம். தாங்கள் நினைக்கின்றபடி அனைத்தும் செயல் படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×