search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மீனுக்கு ஆசைப்பட்டு கையை இழந்த சோகம் - டெட்டனேட்டர் வெடித்து கூலித் தொழிலாளி படுகாயம்

    வத்தலக்குண்டு அருகே மீன் பிடிக்க டெட்டனேட்டரை வெடிக்க செய்த போது கூலித் தொழிலாயின் கை துண்டானது.
    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள மீனாங்கன்னி பட்டியைச் சேர்ந்தவர் துரையன் (வயது 50). திருப்பூரில் கூலித் தொழிலாளியாக உள்ளார். வீடு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தார்.

    அப்போது மீனாங்கன்னிபட்டி வைகை ஆற்றில் மீன் பிடிப்பதற்காக அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் துரையன் சென்றார். ஆற்றின் நடுவில் இருந்த குட்டையில் டெட்டனேட்டர் குச்சிகளை பயன்படுத்தி வெடிக்க செய்து மீன்களை எளிதாக பிடிக்க முடிவு செய்தார்.

    டெட்டனேட்டர் குச்சிகளை துரையன் கையில் வைத்திருந்த போது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் துரையனின் மணிக்கட்டு துண்டிக்கப்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இது குறித்து வத்தலக் குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சை பாண்டியன் மற்றும் கியூ பிரிவு போலீசார் துரையனுக்கு டெட்டனேட்டர் குச்சிகள் எங்கிருந்து கிடைத்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×