search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விபத்தில் மூதாட்டி மரணம் - நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

    திண்டுக்கல் அருகே விபத்தில் இறந்த மூதாட்டிக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா செம்மடைப்பட்டியைச் சேர்ந்த நாச்சிமுத்து மனைவி முத்தம்மாள் (வயது 60). இவர் தனது குடும்பத்துடன் கடந்த 19.2.2016-ந் தேதி ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த அரசு பஸ் மோதியதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த வழக்கு திண்டுக்கல் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் இறந்த முத்தம்மாளின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க கோரி கடந்த 20.7.2018-ந் தேதி தீர்ப்பளித்தார்.

    ஆனால் அந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதனையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

    அதன் பேரில் கோர்ட்டு ஊழியர்கள் இன்று பொள்ளாச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்வதற்காக திண்டுக்கல் பஸ்நிலையத்தில் நின்ற அரசு பஸ் மீது ஜப்தி நோட்டீசை ஒட்டி எடுத்து சென்றனர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கீழே இறங்கி மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
    Next Story
    ×