search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    மதுக்கூரில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து தொடர் காத்திருப்பு போராட்டம்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
    மதுக்கூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து மதுக்கூரில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து நேற்று முதல் பெரிய பள்ளிவாசல் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழக அரசு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்ற மாட்டோம் என்றும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் என் ஆர் சி, சி ஏ ஏ., என் சிஆர் போன்ற கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகின்றது.

    இப்போராட்டத்தின் எஸ்டிபிஐ கட்சி, தமுமுக ராவுத்தர் , மஜக ராவுத்தர் மற்றும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அப்துல் ரஹ்மான் , மனித நேய மக்கள் கட்சி சேர்ந்த ராசிக் மற்றும் ஏராளமான ஏனைய கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்கம் குமரவேல், தி. க.பாரி, எஸ். டி. பி. ஐ. கட்சி அபுபக்கர் சித்திக் வழக்கறிஞர் சபியா நிஜாம் மற்றும் பலர் கண்டன உரையாற்றினர். கண்டன கோ‌ஷங்கள் கேம்பஸ் பிரண்ட் விதைகள் கலைக்குழு சமூக நீதி மாணவர் இயக்கம் ஏராளமானோர் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

    இதில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் அமைப்புகள் மற்றும் பெண்கள் குழந்தைகள் என மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×