search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உருளைக்கிழங்கு
    X
    உருளைக்கிழங்கு

    உருளைக்கிழங்கு வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இங்குள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டம், கோலார், குஜராத், திம்பம், இந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி உருளைக்கிழங்கு வருகிறது.

    நேற்று முன்தினம் மார்க்கெட்டுக்கு 30 லோடு உருளைக்கிழங்கு வந்திருந்தது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து வரத்து எதுவும் காணப்படவில்லை. ஆனால் நேற்று மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து உருளைக்கிழங்கு 1 1/2 லோடு, கோலாரில் இருந்து 20 லோடு, குஜராத்திலிருந்து 10 லோடு திம்பத்திலிருந்து 2 லோடு, இந்தூரில் இருந்து 3 லோடு உருளைக்கிழங்கு என மொத்தம் 40 லோடு வந்திருந்தது. நேற்று முன்தினம் கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ. 900-த்தில் இருந்து ஆயிரத்துக்கும், குஜராத் உருளைக்கிழங்கு ரூ. 750 முதல் 800 வரைக்கும் விற்பனையானது.

    ஆனால் நேற்று நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.1400- க்கு விற்பனை ஆனது. கோலார் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ. 800லிருந்து 900 வரையும் குஜராத் உருளைக்கிழங்கு 45 கிலோ ரூ.700-ல் இருந்து 750 வரையும் விற்பனையானது. திம்பம், இந்தூர் உருளைக்கிழங்கின் விலை ஒரே சீராக காணப்பட்டது. 45 கிலோ உருளைக்கிழங்கு ரூ. 850 வரை விற்பனையானது.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு நேற்று உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்து இருந்ததால் விலை குறைந்து காணப்பட்டது.

    மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள 4 வெள்ளைப்பூண்டு மண்டிகளுக்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து 1500 மூட்டையும், திம்பத்திலிருந்து 1100 மூட்டையும் விற்பனைக்கு வந்திருந்தது. நீலகிரி வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ. 100-ல் இருந்து 260 வரையும் திம்பம் வெள்ளைப்பூண்டு ஒரு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.180 வரையும் விற்பனையானது.

    Next Story
    ×