search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் பகுதியை மாவட்ட கலெக்டர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற முன்னாள் அமைச்சர் மணிகண்டன் எம்.எல்.ஏ., தீவிர முயற்சி மேற்கொண்டார். இது தொடர்பாக தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரிடம் நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் கோரிக்கை விடுத்தார்.

    இதை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு அமைக்கப்பட உள்ளது.

    பட்டிணம்காத்தான் அம்மா பூங்கா அருகே 22.6 ஏக்கரில் மருத்துவக்கல்லூரிக்கான கட்டிடங்களும், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கல்லூரிக்கான மருத்துவமனை கட்டிடங்களும் அமைக்கப்பட உள்ளன.

    கட்டிடப்பணி உள்ளிட்டவற்றுக்கு ரூ.345 கோடியை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான கட்டிடப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந்தேதி நடைபெற உள்ளன. முதல்-அமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மருத்துக் கல்லூரி மாதிரியையும், மாவட்ட துறைகளின் வளர்ச்சியையும் விளக்கும் வகையில் கண்காட்சியும் விழாவில் இடம்பெறவுள்ளன. அவற்றை பார்வையிடும் முதல்வர் மருத்துவக் கல்லூரி பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் பிரதான சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

    அடிக்கல் நாட்டல் அமைவிடம், முதல்வர் வரும் பாதை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சதன் பிரபாகர், கருணாஸ், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான எம்.ஏ. முனியசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சார் ஆட்சியர் சுகபுத்ரா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    ராமநாதபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார், நகர் செயலாளர் அங்குச்சாமி, கீழக்கரை நகர் செயலாளர் ஜகுபர் உசேன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி ஆனிமுத்து, ஆர்.டி.சி.சி. வங்கி முன்னாள் தலைவர் ஜெயஜோதி, முன்னாள் ராம்கோ துணை தலைவர் தஞ்சி சுரேஷ், ராமநாதபுரம் நகர் பாசறை செயலாளர் மணிகண்டன், அம்மா பேரவை முத்துப்பாண்டி, பாலசுப்பிரமணியன், கீழக்கரை இளைஞர் பாசறை தலைவர் செல்வ கணபதி, வார்டு செயலாளர்கள் ஆதில் அமீன், பொதுப்பணி துறை கோட்ட பொறியாளர் குருதி வேல்மாறன், செயற் பொறியாளர் ஜெயதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.
    Next Story
    ×