search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    திமுக தான் மக்களை போராடத் தூண்டுகிறது- அன்புமணி

    திமுக தான் மக்களை போராடத் தூண்டுகிறது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    அம்பத்தூர்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 80-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்பத்தூரில் மாநில துனை பொதுச்செயலாளர் கே.என்.சேகர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று பா.ம.க. தான் கோரிக்கை வைத்தது. முதல்வர் அதை பாதுகாக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை சட்டமாக கொண்டு வர வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத்திலேயே இதை சட்டமாக இயற்ற வேண்டும்.

    பாட்டாளி மக்கள் கட்சியின் ஆசை, லட்சியம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, இலவசமாக இருக்க வேண்டும் என்பது தான். தரமான கல்வி, சுவையான கல்வி, கட்டாய கல்வி, காசு இல்லா கல்வி வர வேண்டும்.

    இந்தியாவிற்கு சுகாதாரம் கொடுத்த கட்சி பா.ம.க. தான். தமிழகத்திற்கு சுகாதாரம் கொடுக்க தெரியாதா?

    நாங்கள் அ.தி.மு.க.வின் கூட்டணியில் தான் இருக்கிறோம். மக்களுக்கு நன்மை செய்தால் பாராட்டுவோம். மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்தால் போராடுவோம். எதிர்த்துக் குரல் கொடுப்போம் அது எந்தக் கூட்டணியில் இருந்தாலும் சரி.

    பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.தலைவர் மு.க,ஸ்டாலின், பொது மக்களிடம் குழப்பத்தில் ஈடுபடுத்தி அதன் மூலம் அரசியல் செய்கிறார், அவருக்கு வேறு எதுவும் தெரியவில்லை. அதுதான் பிரச்சனை. மக்களை தூண்டி ஏதோ இரண்டு கோடி கையெழுத்து என்று மக்களை எல்லாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    மக்களை திசைதிருப்பி இதுபோன்ற போராட்டங்களை தூண்டிவிட்டு இதில் திட்டமிட்டு வன்முறைகளை தூண்டி போராட்டங்களை தி.மு.க. போன்ற கட்சிகள் மறைமுகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு விவசாயி முதல்-அமைச்சர் விவசாயிகளுடைய கஷ்டங்களை புரிந்து காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட டெல்டா மண்டலமாக அறிவித்ததற்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் 20 நீர் மேலாண்மை பிரச்சினை இருக்கிறது. இதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி நாம் எதிர்கொள்ளும் மிக மோசமான காலநிலை மாற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு தயார் நிலையில் இது போன்ற வேளாண் சார்ந்த நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

    முதலமைச்சருக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×