search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காதலர் தினத்தில் போலீஸ் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்

    திருப்பூர் அருகே காதலர் தினத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் காங்கயம் ரோடு பொன்முத்து நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 33). அங்குள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக உள்ளார். அதே கம்பெனியில் அனிதா (20) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

    இவர்களின் காதல் விவகாரம் தெரியவந்ததும் இருவரது பெற்றோர்களும் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலில் உறுதியாக இருந்த காதல்ஜோடி காதலர் தினத்தில் கரம்பிடிக்க முடிவு செய்தனர்.

    நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. வினோத்தும், அனிதாவும் நண்பர்கள் முன்னிலையில் அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வீரபாண்டி அனைத்து மகளிர் போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.

    விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் ஷீலா இருவரது பெற்றோரையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையில் சமாதானம் அடைந்த பெற்றோர் திருமணத்தை ஏற்கொண்டனர்.

    எனினும் காதல் திருமணம் செய்த தம்பதியை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டோம் என்று எழுதி கையெழுத்திடுமாறு இன்ஸ்பெக்டர் கேட்டார். பெற்றோரும் உறுதிமொழி கடிதம் எழுதி கொடுத்தனர்.

    பல போராட்டங்களுக்கு பின்னர் இணைந்த காதல்ஜோடி புதுமணத் தம்பதியாக காதலர் தினத்தில் அடியெடுத்து வைத்தனர்.
    Next Story
    ×