search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி
    X
    கனிமொழி

    சிஏஏ-க்கு எதிராக போராட்டம்: தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி வலியுறுத்தல்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    குடியுரிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த மூன்றுக்கும் எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்புகள்  சார்பில் நேற்று போராட்டம் நடத்தின. இதில் குழந்தைகள், பெண்கள் என பலர் கலந்துகொண்டனர். அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தைக் கைவிடும்படி போராட்டக்காரகளை எச்சரித்தனர். போராட்டக்காரர்கள் இதற்கு செவிகொடுக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்து கற்களும் வீசப்பட்டன. தடியடி மற்றும் தள்ளுமுள்ளுவில் போராட்டக்காரர்கள் 5 பேரும், மேற்கு மண்டல காவல் இணை ஆணையர் விஜயகுமாரி உள்பட காவலர்கள் 4 பேரும் காயமடைந்தனர். 

    இந்நிலையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, தி.மு.க. எம்பி கனிமொழி கூறியதாவது:

    சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை போலீசார் உரிய முறையில் கையாளவில்லை. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார்  நிலைமையை தவறாக கையாண்டதால் வன்முறை ஏற்பட்டது. சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போராட்டத்தை உரிய முறையில் கையாண்டு இருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.
    Next Story
    ×