search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்த காட்சி.
    X
    பெண்கள் காலிகுடங்களுடன் மறியல் செய்த காட்சி.

    காரிமங்கலம் அருகே பெண்கள் காலிகுடங்களுடன் குடிநீர் கேட்டு சாலை மறியல்

    காரிமங்கலம் அருகே இன்று குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    காரிமங்கலம்

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள திண்டல் ஊராட்சிக்குட்பட்ட உச்சம்பட்டி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது அந்த கூட்டு குடிநீர் கடந்த 6 மாதங்களாக வழங்கவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்தனர். 

    இது குறித்து பலமுறை அந்த பகுதி மக்கள் அதிகாரியிடம் பலமுறை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் இன்று காலை 10 மணி அளவில் காரிமங்கலம்-மொரப்பூர் சாலை மோட்டூர் ரைஸ் மில் என்ற இடத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியல் செய்தவர்களிடம் இன்னும் 2 தினங்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினர். இதனால் அதிகாரிகளின் பேச்சு வார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியலை பெண்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×