search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான கோட்டையூரில் மீனவர்கள் கம்பிகளில் மீன்களை காயவைத்தனர்.
    X
    மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான கோட்டையூரில் மீனவர்கள் கம்பிகளில் மீன்களை காயவைத்தனர்.

    மேட்டூர் அணை நீர்மட்டம் 106.13 அடியாக குறைந்தது

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது.
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. நேற்று அணைக்கு 127 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை இது 116 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

    நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. நேற்று அணையின் 106.22 அடியாக இருந்தது. இன்றுகாலை இது 106.13 அடியாக குறைந்தது. கோடைகாலம் நெருங்கி வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

    இருந்த போதிலும் தற்போது அணை நீர்மட்டம் 106 அடிக்கு மேல் உள்ளதால் இந்த ஆண்டு கோடைகாலத்தில் மேட்டூர் அணையை நம்பி உள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியான பாலாற்றில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து மீன்பிடித்து வருகின்றனர். மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியான கோட்டையூரில் மீனவர்கள் மீன்களை கம்பிகளில் கட்டி காயவைத்து கருவாடாக மாற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×