search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைத்திலிங்கம் எம்.பி.
    X
    வைத்திலிங்கம் எம்.பி.

    விமான நிலைய மேம்பாடு குறித்து வைத்திலிங்கம் எம்.பி. ஆலோசனை

    புதுவை விமான நிலைய மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் வைத்திலிங்கம் எம்பி தலைமையில் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை விமான நிலைய மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் லாஸ்பேட்டை விமான நிலையத்தில் நடந்தது. குழுவின் தலைவரான வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார். கன்வீனரான விமான நிலைய இயக்குனர் விஜய்உபத்யாய், உறுப்பினர்கான கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷியா யாதவ், இந்திய ரிசர்வ் போலீஸ் கமாண்டென்ட் ராஜேஷ், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், ஸ்பைஸ் ஜெட் மேலாளர் சொக்கலிங்கம், நியமன உறுப்பினர்கள் பிரேம்ராஜா, அமர்நாத், கோவிந்தராஜலு, வைத்தியநாதன், பிரவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் விமான நிலையத்திற்குள் வரும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பது. விமான நிலையத்தை ஒட்டியுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தில் இருந்து வரும் நீரை தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

    புதுவையில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தை மீண்டும் புதுவைக்கு இயக்குவது, இரவில் பயணிகள் தங்குவதற்கு தேவையான கேட்டரிங் வசதி செய்வது, இரவில் விமானத்தை இயக்க தேவையான வசதிகள், விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்துவது, சரக்கு விமான சேவை தொடங்குவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.

    Next Story
    ×