search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரை மாவட்டத்தில் 26 லட்சம் வாக்காளர்கள்- கலெக்டர் தகவல்

    தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்துக்குரிய இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினய் வெளியிட்டார்.
    மதுரை:

    தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டத்துக்குரிய இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வினய் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2020-ம் நாளினை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் 23.12.2019 அன்று வெளியிடப்பட்டது. 23.12.2019 முதல் 22.1.2020 வரை பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் திருத்தங்களை செய்யவும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திடவும் உரிய படிவங்கள் பெறப்பட்டன.

    4.1.2020, 5.1.2020, 11.1.2020 மற்றும் 12.1.2020 ஆகிய 4 நாட்களிலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. பெறப்பட்ட படிவங்கள் அனைத்தும் உரிய விசாரணைகள் மேற்கொண்டு தகுதி வாய்ந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்டன.

    இன்று (14-ந்தேதி) மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

    ஆண் வாக்காளர்கள் 13 லட்சத்து 2 ஆயிரத்து 700. பெண் வாக்காளர்கள் 13 லட்சத்து 40 ஆயிரத்து 435. இதரர் 170. மொத்தம் 26 லட்சத்து 43 ஆயிரத்து 305 வாக்காளர்கள் உள்ளனர்.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×