search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை
    X
    தமிழக சட்டசபை

    தூத்துக்குடி அருகே ரூ.49,000 கோடியில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை

    தூத்துக்குடி அருகில் 49,000 கோடி ரூபாய் செலவில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகம் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு மானியம் வழங்குவதற்காக 149.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் 20 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஜனவரி மாதம் 2020-ம் ஆண்டில் 32,405 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில், 52,075 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய தனிப்பட்ட முதலீடாக, குவைத் நாட்டைச் சார்ந்த அல் கெப்லா அல் வட்யா குழுமம், தூத்துக்குடி அருகில் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை மற்றும் பெட்ரோலியம் வேதிப்பொருட்கள் தயாரிப்பு வளாகத்தை 49,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கும்.

    இந்த முதலீடு, அதைச் சார்ந்த உப தொழில்களுக்கு குறிப்பிடத்தக்க பயன் அளிப்பதுடன் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் பெருமளவு வேலை வாய்ப்பினையும் உருவாக்கும்.

    தொழில்துறை உபயோகத்தில் உள்ள நிலங்களின் நிலப் பயன்பாட்டை மேம்படுத்த, மாநிலத்தில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கான தரைதளக் குறியீடு ஒன்றிலிருந்து ஒன்றரையாகவும் மற்றும் மனை பரப்பளவு 50 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் மாவட்டத்தில் 21,966 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டுத் திட்டம்செயல்படுத்தப்படும்.

    Next Story
    ×