search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    31,780 மெகாவாட்டாக மின் உற்பத்தி அதிகரிப்பு

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தற்போதைய ஒட்டுமொத்த நிறுவு திறன் 31,780 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது. இதில் 13,343 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனும் அடங்கும்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதில் கூறியிருப்பதாவது:-

    2011-ம் ஆண்டு முதல் மாநில, மத்திய அரசுகளின் திட்டங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் உட்பட்ட மின்சக்தி கொள்முதல் மூலம் 15,296 மெகாவாட் உற்பத்தி திறன் கூடுதலாக மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் தற்போதைய ஒட்டுமொத்த நிறுவு திறன் 31,780 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது. இதில் 13,343 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனும் அடங்கும்.

    தென் மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை விநியோகிப்பதற்கான கட்டமைப்பில் இணைப்பதற்கும், சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தடத்தில் உள்ள மின் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், 765 கிலோவோல்ட் மற்றும் 400 கிலோவோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் மேம்படுத்தப்படுவதற்கு ஒட்டப்பிடாரத்தில் 400 கிலோ வோல்ட் திறன் மற்றும் விருதுநகரில் 765 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டம் 4,650 கோடி ரூபாய் மொத்த செலவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் 45.1 கோடி அமெரிக்க டாலர் கடன் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக 450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தற்போதுள்ள 5,692 விநியோக மின்மாற்றிகள், 785 கோடி ரூபாய் செலவில் 11 கிலோவோல்ட் வளைய சுற்றுத்தர அமைப்புகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    குறிப்பிடத்தக்க பயன்பாடு மற்றும் நிதி பயன்கள் அளிக்கக்கூடிய காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களின் மின் பயன்பாட்டையும் அளவிடும் தானியங்கி அளவீட்டுக் கருவிகளை நிறுவுவதற்கான திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் பெரிய அளவில் செயல்படுத்தி உள்ளது.

    உதய் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் 22,815 கோடி ரூபாய் கடன் பொறுப்பு மாநில அரசால் ஏற்கப்பட்டது. அதன் நான்காவது தவணை மானியமான 4,563 கோடி ரூபாய் 2020-21-ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்துக்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தில் 50 சதவீதத்தை ஈடு செய்வதற்கு 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் 4,265.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் எரிசக்தி துறைக்கு 20,115.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×