search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    பட்ஜெட் வாசித்தபோது சட்டசபையில் அமைதி காத்த எதிர்க்கட்சிகள்

    தமிழக சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்கள் அமைதியாக பட்ஜெட் வாசிப்பை முழுமையாக கவனித்தனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. சபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் காலை 9.57 மணிக்கு சட்டசபைக்கு வந்திருந்தனர்.

    அவர்களுக்கு முன்பாகவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்தனர்.

    எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வந்தபோது தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர்ஓ.பன்னீர் செல்வம் வந்த போதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

    காலை 10 மணிக்கு சபை கூடியதும் சபாநாயகர் தனபால் திருக்குறளை வாசித்து சபையை தொடங்கினார். இதைத் தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள்

    இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் சபையில் அமைதியாக இருந்தனர். பட்ஜெட் வாசிக்கும்போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட யாரும் வெளிநடப்பு செய்யவில்லை. அனைவரும் சபையில் அமர்ந்திருந்து பட்ஜெட் வாசிப்பை முழுமையாக கவனித்தனர்.

    Next Story
    ×