search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம்
    X
    ஓ பன்னீர்செல்வம்

    புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆகஸ்டு மாதத்துக்குள் பட்டா

    ஆட்சேபனையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆகஸ்டுக்குள் வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முதல்வரின் கிராமத் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய 5 ஆண்டு திட்டம்.
    * 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு ரூ.966 கோடி ஒதுக்கீடு

    மடிக்கணினி

    * கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள் ரூ.2,298 கோடியில் மேற்கொள்ளப்படும்
    * முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்திற்கு ரூ.959.21 கோடி நிதி ஒதுக்கீடு
    * அம்மா உணவகத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
    * பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு
    * ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியீடு
    * 2020-21க்கான பட்ஜெட் திட்ட மதிப்பீட்டின் படி நிதிப்பற்றாக்குறை 2.84 சதவீதமாக இருக்கும்.
    * மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்ட வறண்ட குளங்களுக்கு திருப்பிவிடும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு
    * காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கீடு

    * மீனவர்களுக்காக மீன்பிடி தடைக்கால உதவி, சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.298.12 கோடி ஒதுக்கீடு
    * நகர்ப்புற உள்ளாட்சிக்கு ரூ.5,306.95 கோடியும், ஊரக உள்ளாட்சிக்கு ரூ.6,754.30 கோடியும் ஒதுக்கீடு
    * முதல்வரின் கிராமத் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய 5 ஆண்டு திட்டம் அறிமுகம்
    * பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்திற்காக ரூ.3,099.77 கோடி, முதல்வர் பசுமை வீடுகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
    * 2020-21ம் ஆண்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டப்படும்
    * சாலைப் பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு ரூ.500 கோடியாக உயர்த்தப்படும்
    * நெடுஞ்சாலைத்துறையில் சாலைப் பாதுகாப்பிற்கு தனியாக பிரிவு உருவாக்கப்படும்
    * தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர் விழுப்புரம், மதுரையில் மேலும் 8 வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள்

    * அத்திக்கடவு-அவிநாசி நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
    * அம்ருத் திட்டத்திற்காக ரூ.1,450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
    * சிறப்பு பொதுவிநியோகத் திட்டத்தில் 2020-21-ம் ஆண்டிலும் துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் தரப்படும்
    * ஆட்சேபனையில்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆகஸ்டுக்குள் வீட்டுமனைப்பட்டா
    * தமிழக தொல்லியல்துறைக்கு ரூ.31.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    * பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு ரூ.400 கோடி மானியம்
    * கரும்பு சாகுபடியில் நுண்ணீர்ப் பாசனத்தை ஊக்குவிக்க ரூ.75 கோடி கூடுதல் நிதியுதவி அளிக்கப்படும்
    * 11.1 லட்சம் ஏக்கருக்கு நெல் விதைப்பு முறை நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கைக்கு விரிவுபடுத்தப்படும்
    * காவிரி வடிநிலப்பகுதிகளில் உள்ள கால்வாய்களில் 392 தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ரூ.67.25 கோடி ஒதுக்கீடு.
    Next Story
    ×