search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்

    டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதையடுத்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மூன்றாவது முறையாக டெல்லி முதல் அமைச்சராக பதவியேற்க இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

    கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவின் மூலமும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மீண்டும் டெல்லியில் வெற்றி பெற்றுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியின் நீதிமான்கள், முற்போக்கான அரசியலை தழுவி, ஓட்டு போடுவதன் மூலம், ஆம்ஆத்மி கட்சியின் வெற்றிக்கு வழிகாட்டி உள்ளனர். அடுத்த ஆண்டு, இதை தமிழகம் பின்பற்றும். நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்லலாம்’ என்று கூறியுள்ளார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் பாணியிலேயே வடதுசாரியாகவும் இல்லாமல், இடதுசாரியாகவும் அல்லாமல் மய்ய அரசியலை முன்னெடுத்து வருகிறார் கமல்ஹாசன். கட்சி தொடங்கும் முன்பே அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து தன்னிடம் இருக்கும் திட்டத்தை பகிர்ந்து அதற்கான ஆலோசனையையும் பெற்றார். இப்போதும் அவரை நேரடியாக சந்தித்து தன் அரசியல் திட்டங்களுக்கு வலுசேர்த்து வருகிறார். டெல்லி தேர்தலில் போட்டியிட்ட கெஜ்ரிவாலுக்கு தனது ஆதரவை வீடியோ மூலமாக பதிவிட்டவர் கமல்ஹாசன்.. “கெஜ்ரிவாலை தலைவராக பின் தொடராதீர்கள். அவரை அப்படியே உள்வாங்கி கொள்ளுங்கள். எனது தோளோடு தோள் நிற்கும் சகோதரர் கெஜ்ரிவாலுக்கு என்னுடைய வணக்கங்கள்”

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதற்கு கெஜ்ரிவால் “நன்றி கமல் அவர்களே, டெல்லி முதல்வராக இருந்த ஐந்தாண்டு அனுபவத்தில் உணர்ந்தது என்னவென்றால் நமது நாட்டு மக்களை, வேண்டும் என்றே கல்வி அறிவில்லாதவர்களாகவும், வறுமையானவர்களாகவும் கடந்த 70 ஆண்டுகளாக வைத்துள்ளனர்... அரசிடம் பணம் இல்லை என்பது பொய்யான கருத்து ஆகும்.. ஆட்சியாளர்களுக்கு நல்ல நோக்கம் வேண்டும்” என்று டுவிட்டரில் பதிலளித்து இருந்தார்.

    கமல்ஹாசன் தனது கட்சியை மதுரையில் ஆரம்பித்தபோது அதன் தொடக்க விழாவுக்கு வந்திருந்தவர்களில் கெஜ்ரிவாலும் ஒருவர். இருவரும் இணக்கமாக நட்பு பாராட்டி வருகிறார்கள்.

    தமிழகத்தில் கெஜ்ரிவாலைப் போல கமல்ஹாசன் புதிய வரலாறு படைப்பார் என்ற நம்பிக்கையில் அவரது கட்சியினர் உள்ளனர். சென்னைக்கு கெஜ்ரிவால் வந்திருந்தபோது கமல்ஹாசன் வீட்டுக்குப் போயிருந்தார். இதுகுறித்து கமல்ஹாசன் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார்.

    இருவரும் ஊழல், மதவாதத்தை எதிர்த்துப் போரிடுகிறோம். தற்போது உள்ள சூழல் குறித்து இருவரும் உரையாடினோம். அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது எங்களது கடமை என்று கூறியிருந்தார். கிட்டத்தட்ட இன்னொரு கெஜ்ரிவாலாக தமிழகத்தில் உருவெடுக்கும் திட்டம்தான் கமல்ஹாசன் மனதில் உண்மையில் உள்ளது என்று அவர் கட்சி நிர்வாகிகள் கூறுகிறார்கள். கெஜ்ரிவால் பாணியில் கமல் ஆட்சியை பிடிப்பார் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
    Next Story
    ×