search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையை படத்தில் காணலாம்.
    X
    குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையை படத்தில் காணலாம்.

    விபத்துகளை தடுக்க வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    அரசு பள்ளி அருகே விபத்துகளை தடுக்க வேகத்தடையில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை நகர பகுதிக்குட்பட்ட எம்.பி.எஸ். அக்ரஹாரம் மற்றும் டவுன்ஹால் தெரு ஆகிய பகுதிகளில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட பல தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த தெரு பகுதியில் பள்ளி தொடங்கும் காலை மற்றும் பள்ளி விடும் மாலை நேரங்களில் இந்த தெருக்களின் சாலையில் சற்று அதிக்கப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதனை கருத்தில்கொண்டு பள்ளியைவிட்டு வெளியே வரும் மாணவ, மாணவிகள் எந்தவகையிலான விபத்துகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டும், இந்தவழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் எம்.பி.எஸ். அக்ரஹாரம் மற்றும் டவுன்ஹால் தெரு இணையும் இடத்தில் அரசு ஆண்கள் பள்ளி அருகில் வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    மாணவ, மாணவிகள் நலனை கருத்தில்கொண்டு இந்த வேகத்தடை அமைக்கப்பட் டிருந்தாலும், இந்த வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டிகள் அறிந்துகொள்ளும் வகையில் இதன்மீது வெள்ளை வர்ண பூச்சுகள் அடிக்கப்படவில்லை. இதனால் புதிதாக இச்சாலை வழியாக பயணிப்பவர்கள் மட்டுமல்லாது தினசரி இச்சாலை வழியாகச் செல்பவர் களும் சிறு, சிறு விபத்துகளில் சிக்கிக்கொள்வதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். எனவே இதுபோன்ற விபத்துகளை தடுக்க வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசவேண்டும் அதேபோல குளித்தலை நகரப்பகுதிக்குட் பட்ட பல இடங் களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வெள்ளை வர்ணம் பூசவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×