search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்
    X
    முருகன்

    திருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல்

    திருச்சி நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட திருவாரூர் முருகனிடம் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    சென்னை:

    திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்ததில் கைது செய்யப்பட்டான். அவருடன் கூட்டாளிகள் பலரும் சிக்கினார்கள்.

    நகைக்கடை கொள்ளை சம்பவத்துக்கு முன்பாக திருவாரூர் முருகன் செனனையில் பதுங்கி இருந்து அண்ணா நகர் பகுதியில் கைவரிசை காட்டினான்.

    அண்ணா நகர், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர், அரும்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த திருவாரூர் முருகன் தலைமறைவானான்.

    இதுபற்றி விசாரணை நடத்திய சென்னை போலீசார் திருவாரூர் முருகனின் கூட்டாளிகளை மட்டும் கைது செய்தனர்.

    திருவாரூர் முருகன் பிடிபடாமலேயே இருந்தான். சென்னை போலீசார் தேடி வந்த நிலையில் தான் திருச்சியில் நடந்த நகைக்கடை கொள்ளை வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டான். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் திருவாரூர் முருகனை அண்ணாநகர் போலீசார் காவலில் எடுத்தனர்.

    முதலில் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது அவனிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து முருகன் பதுக்கி வைத்திருந்த மேலும் நகைகளை மீட்க வேண்டும் என்றும், எனவே கூடுதலாக 7 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து 7 நாட்கள் போலீஸ் காவலுக்கு நீதிமன்றம் அனுமதித்தது. இதைத் தொடர்ந்து திருவாரூர் முருகனை மதுரை மற்றும் புதுக்கோட்டைக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அண்ணாநகர் பகுதியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் மதுரையில் உள்ள அடகு கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அந்த நகைக்கடைகளில் இருந்து 1 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் காவல் முடிந்து திருவாரூர் முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×