search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயில்சாமி அண்ணாதுரை
    X
    மயில்சாமி அண்ணாதுரை

    கலாம் கனவை நனவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்- மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

    அப்துல் கலாம் கனவை நனவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் இஸ்ரோ தலைவரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
    கரூர்:

    கரூரில் நடந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் இஸ்ரோ தலைவரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    1947 சுதந்திரத்துக்கு பின்னர் நமக்கு ஒரு கனவு ஆண்டாக இருந்தது 2020. அந்த ஆண்டில் நாம் உள்ளோம். கலாம் கண்ட கனவான 5வது பெரிய பொருளாதார மண்டலமாக இந்தியா வரவேண்டும். அனைவருக்கும் சரி சமமாக கல்வி சேர்ந்திட வேண்டும். குறிப்பாக அனைவருக்கும் உயர்கல்வி கிடைத்திட வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் உதவ வேண்டும் என்ற கலாம் கண்ட கனவுகளை நனவாக்கிட அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

    2022ல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்  சுகன்யான். இது மூன்று அடுக்கு திட்டமாகும். இதன் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மனித உருவில் ரோபாட் அனுப்பப்படும். அதன் மூலம் மனிதன் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகள், கதிர்இயக்க தாக்கம்,   தட்பவெப்ப நிலையை தாக்குப்பிடிக்க முடிகிறதா? பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்று ஆராய்ச்சி நடக்கும்.
    அப்துல் கலாம்.
    அதில் ஏற்படும் விளைவுகளை பார்த்து அதற்கு ஏற்ப மீண்டும் சரிசெய்து இரண்டாவது முறையாக மனித உருவில் மீண்டும் ஒரு ரோபாட் அனுப்பப்படும். இந்த 2 முறைகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர் மூன்றாவது  கட்டமாக மனிதனை 400 கிலோ மீட்டர் அளவில் விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    ஆழ்துளை கிணறுகளில் விழுபவர்களை காத்திட கருவிகளை உருவாக்கும் ஆராய்ச்சி நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமன்றி சாக்கடைகளை சுத்தம் செய்ய எந்திர மனிதனை உருவாக்குதல் போன்ற ஆராய்ச்சிகளும் நடக்கின்றன. இதற்கான கருவிகள் கண்டிப்பாக கண்டுபிடிக்கப்படும். அதே நேரத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறு களை மூடவேண்டியது முக்கியமான பணியாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×