search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதை மாத்திரை விற்ற 5 பேர் கும்பல் சிறையில் அடைப்பு

    உடுமலையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை அதிகளவில் விற்கப்படுகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதைமாத்திரை விற்று வருவதாக உடுமலை போலீசாருக்கு தினமும் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து போலீசார் கஞ்சா மற்றும் போதைமாத்திரை விற்பவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று உடுமலை அனு‌ஷம் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் போலீசார் அனு‌ஷம் நகர் 3-வது வீதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது. போலீசார் அவர்கள் அருகில் சென்றனர்.

    போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் இவர்கள் உடுமலை அய்யலு மீனாட்சி நகரை சேர்ந்த ஷாம்(24), சாதிக் நகரை சேர்ந்த ரகுமான்(26), காஜா மை தீன்(33), தங்கம்மாள் ஓடையை சேர்ந்த சதாம் உசேன்(26), வெள்ள கோவிலை சேர்ந்த அர்ஜூன் (25) என்பதும் தெரிய வந்ததும்.

    இதில் அர்ஜூன் வெள்ள கோவிலில் சொந்தமாக மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். அங்கு போதை ஏற்ற பயன்படுத்தப்படும் மாத்திரைகளை விற்பனை செய்துள்ளார்.

    மேலும் அதனை சட்ட விரோதமாக உடுமலையில் பகுதியில் உள்ள தனது நண்பர்களிடம் விற்பனைக்கு கொடுத்ததும், அதனை இந்த கும்பல் இந்த பகுதியில் படித்து வரும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×