search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎன் நேரு
    X
    கேஎன் நேரு

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஸ்டாலின் அனுமதி: முதலமைச்சரின் பேச்சுக்கு கேஎன் நேரு கண்டனம்

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஸ்டாலின் தான் அனுமதி அளித்தார் என்ற முதலமைச்சரின் பேச்சுக்கு கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துக் கல்லூரியின் திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

    'நானும் ஒரு விவசாயி என்பதால் வேளாண்மை துறைக்கு பார்த்துப் பார்த்து நன்மைகளைச் செய்கிறேன். நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்குத் தமிழக அரசு தடையில்லா சான்று வழங்காமல் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது. இது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும். இருந்தாலும் மக்களிடம் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நாங்கள் ஆதரிப்பதாகப் பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
    எடப்பாடி பழனிசாமி.
    இந்த திட்டத்தை தி.மு.க தான் கொண்டு வந்தது. 1996ம் ஆண்டு டி.ஆர்.பாலு மத்திய மந்திரியாக இருந்த போது தான் கொண்டு வந்தார். 2010ம் ஆண்டு ஸ்டாலின் முன்னிலையில் டி.ஆர். பாலு மத்திய அரசோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க அரசு தான் கொண்டு வந்தது. அதை அ.தி.மு.க தடுத்து நிறுத்தியது என்று கூறினார்.

    இந்நிலையில் இது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:- 

    ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஸ்டாலின் தான் அனுமதி அளித்தார் என்ற முதலமைச்சரின் பேச்சுக்கு  கண்டனம் தெரிவிக்கிறேன். காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தபோது முதலமைச்சர் கண்டிக்காத‌து ஏன்?  விவசாயிகள் பிரச்சினையை திசை திருப்பவே வேளாண் மண்டல அறிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×