search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ராமநாதபுரம் நகராட்சிக்கு வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல்

    ராமநாதபுரம் நகராட்சிக்கு வாடகை தொகை செலுத்தாத 6 கடைகளுக்கு நகராட்சி கமி‌ஷனர் விஸ்வநாதன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் நகராட்சிக்கு வாடகை தொகை செலுத்தாத 6 கடைகளுக்கு நகராட்சி கமி‌ஷனர் விஸ்வநாதன் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். வரி செலுத்தாத 10-க்கும் அதிகமான வீடுகள், கடைகளின் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டங்களுக்கு செலவிடப்பட்ட தொகையை நகராட்சி நிர்வாகம் வட்டியுடன் நபார்டு வங்கிக்கு செலுத்தி வருகிறது. அத்துடன், குடிநீர் விநியோகத்திற்கான பராமரிப்பிற்காக மாதந்தோறும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.10 லட்சம் நகராட்சி செலுத்துகிறது.

    நகராட்சிக்கான சிறப்பு நிதி வழங்கப்படாத நிலையில், வரி வசூல் மூலம் நகராட்சியில் நலத் திட்டங்களை செயல்படுத்தும் நிலை உள்ளது.

    நகராட்சியில் கடந்தாண்டு நிலுவைத்தொகையுடன் ரூ.17 கோடி வருவாய் பாக்கி வர வேண்டி உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக சொத்து வரி உள்ளிட்டவை மூலம் ரூ.7 கோடி மட்டுமே வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    குடிநீர் கட்டண வரியாக ரூ1.50 கோடியும், பாதாள சாக்கடை இணைப்பு வரியாக ரூ.1.60 கோடியும், தொழில் வரி ரூ.25 லட்சமும் நிலுவையில் உள்ளது. நகராட்சியில் நடப்பு ஆண்டு வருவாய் 60 சதவீதம் வந்துள்ளது. நிலுவைத் தொகை 40 சதவீதம் வர வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வரி வசூலை தீவிரப்படுத்தும் வகையில் நகராட்சிக்கு சொந்தமான சந்தை திடல் பகுதியில் உள்ள கடைகளில் வாடகை செலுத்தாத 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வரி செலுத்தாத 10 க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி கமி‌ஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

    Next Story
    ×