search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
    X
    திருவள்ளூரில் கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துக்களை ஜனாதிபதியிடம் 5 நாளில் வழங்குவோம்- மு.க.ஸ்டாலின்

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கையெழுத்துக்கள் இன்னும் 5 நாட்களில் ஜனாதிபதியிடம் கொடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    திருவள்ளூர்:

    குடியுரிமை சட்ட திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்கப்பட்டு ஜனாதிபதியிடம் வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கையெழுத்து இயக்கத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொளத்தூர், ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் கையெழுத்துகளை வாங்கினார்.

    திருவள்ளூரில் இன்று மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். திருவள்ளுர் காமராஜர் சிலை அருகே மத்திய, மாநில அரசுகள் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை அனுமதிக்க கூடாது போன்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

    இதில் மு.க. ஸ்டாலின் பங்கேற்று கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்துக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. எம்,எல்,ஏக்கள்,. வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, அவைத்தலைவர் திராவிட பக்தன் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் மற்றும் நிர்வாகிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் சித்தார்த்தன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக பொதுமக்கள் கையெழுத்து போட்டு வருகிறார்கள். ஒரு கோடி கையெழுத்து வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 2 கோடி பேர் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

    பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் கையெழுத்துக்கள் இன்னும் 5 நாட்களில் ஜனாதிபதியிடம் கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×