search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் கென்னடி
    X
    டாக்டர் கென்னடி

    கும்மிடிப்பூண்டியில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கி பொருட்கள் சூறை

    கும்மிடிப்பூண்டியில் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கி பொருட்களை சூறையாடிய 15 பேர் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி, கோட்ட கரையில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு பெரிய பாளையத்தை அடுத்த ஆரணியை சேர்ந்த கென்னடி தலைமை மருத்துவராக உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு சாமிரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் வி‌ஷம் குடித்து விட்டதாக சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டார்.

    அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் கென்னடி சிகிச்சை அளித்தார். பின்னர் கார்த்திக் உள்நோயாளிகள் தங்கும் வார்டுக்கு மாற்றப்பட்டார்.

    அவரை பார்ப்பதற்காக சுமார் 15 பேர் கும்பல் உள் நோயாளிகள் பிரிவுக்கு வந்தனர். அவர்கள் கார்த்திக்கிடம் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தனர். சிலர் குடிபோதையில் இருந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து அங்கு சென்ற டாக்டர் கென்னடி, நோயாளிகள் தங்கும் அறையில் தேவையில்லாமல் சத்தம் போடக்கூடாது என்று கூறினார். மேலும் நோயாளியுடன் 2 பேர் மட்டும் இருக்கும்படியும் அறிவுறுத்தினார்.

    இதில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரம்அடைந்த கும்பல் டாக்டர் கென்னடியை சரமாரியாக தாக்கினர். மருத்துவமனையில் இருந்த மேஜை, பிளாஸ்டிக் நாற்காலி மற்றும் மருத்துவ உபகரணங்களை அடித்து உடைத்தனர்.

    பின்னர் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் கார்த்திக்கையும் தங்களுடன் அழைத்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    தகவல் அறிந்தும் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து மருத்துவமனையில் உள்ள கண்காணிர்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    காயம் அடைந்த டாக்டர் கென்னடி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    டாக்டரை தாக்கி ஆஸ்பத்திரியை சூறையாடிய கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×