search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிற்சி வகுப்பில் நீதிபதி கருணாநிதி பேசியதையும், அதில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.
    X
    பயிற்சி வகுப்பில் நீதிபதி கருணாநிதி பேசியதையும், அதில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.

    குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் - நீதிபதி அறிவுறுத்தல்

    குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் குறித்து மாவட்ட அளவிலான பயிற்றுனர்களுக்கான 2 நாள் பயிற்சி வகுப்பு நேற்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொடங்கியது. இதற்கு சமூக நலத்துறையின் மகிளா சக்தி கேந்திரா திட்டத்தின் மகளிர் நல அலுவலர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி கலந்து கொண்டு பயிற்சி வகுப்பினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசுகையில், குழந்தைகள் செல்போன் உபயோகிப்பதால் படிப்பில் கவனம் குறைகிறது. குழந்தைகளுக்கு செல்போன் கொடுப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். இதுகுறித்து பயிற்றுனர்கள் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். செல்போனில் தற்போது உள்ள நிறைய செயலிகள் பெண் குழந்தைகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளது.

    மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுக்க பயிற்றுனர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். மகளிர் நல அலுவலர் ஜெயந்தி பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி பேசினார். குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபு குழந்தை உரிமைகள் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் குறித்து பேசினார். குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாத்தல் குறித்து சமூக நல அலுவலகத்தின் பாதுகாப்பு அலுவலர் முத்துச்செல்வி பேசினார். இதில் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இன்றும் (வியாழக்கிழமை) பயிற்சி வகுப்பு நடக்கிறது.
    Next Story
    ×