search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொத்தடிமைகள் மீட்பு
    X
    கொத்தடிமைகள் மீட்பு

    செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த சிறுவர்கள் உள்பட 42 பேர் மீட்பு

    திருவள்ளூரை அடுத்த பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த சிறுவர்கள் உள்பட 42 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகள் இருப்பதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் வித்யா, ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் முருகநாதன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, 13 சிறுவர்கள் உட்பட 42 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்ப்பது தெரியவந்தது. அவர்களை மீட்டு, திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அவர்களுக்கு கொத்தடிமை மீட்பு சான்று மற்றும் வாழ்வாதார நிதியாக தலா ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    மேலும் இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொத்தடிமைகளாக வைத்திருந்த செங்கல்சூளை உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×