என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  தொழிலாளி வீட்டில் திருட முயன்ற துணி வியாபாரிகள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கூடங்குளம் அருகே தொழிலாளி வீட்டில் திருட முயன்ற துணி வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.
  நெல்லை:

  கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் சேவியர் அமர்சிங்(வயது 31), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை வேலைக்காக வெளியில் சென்றுள்ளார். அப்போது அங்கு துணி விற்பதற்காக 2 துணி வியாபாரிகள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் அமர்சிங் வீட்டின் கதவு பூட்டியிருந்ததை பார்த்துள்ளனர்.

  உடனே வீட்டினை திறந்து அங்கு இருந்த பீரோவை திறந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அமர்சிங் துணி வியாபாரிகள் இருவரும் வீட்டினுள் நிற்பதை பார்த்த அவர் திருடன் திருடன் என சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து இருவரையும் பிடித்தனர்.

  பின்னர் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கூடங்குளம் அருகே உள்ள முருகபுரம் மேலத்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம்(45), திசையன்விளை நவலடி தெருவை சேர்ந்த அந்தோணி ராஜ்(37) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

  Next Story
  ×