என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  ராஜாக்கமங்கலம் அருகே மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜாக்கமங்கலம் அருகே கிளைகளை முறிப்பதற்காக மரத்தில் ஏறிய தொழிலாளி கால் தவறி கீழே விழுந்து பலியானார்.
  ராஜாக்கமங்கலம்:

  ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பழவிளை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் தயாகரன் (வயது 31).

  இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். தயாகரன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

  சம்பவத்தன்று வழக்கம் போல அவர், வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அதன் பிறகு அங்குள்ள ஒரு மரத்தில் கிளைகளை முறிப்பதற்காக தயாகரன் ஏறினார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி தயாகரன் மரத்தில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

  அவரது அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.ஆனால் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் தயாகரன் இறந்து விட்டது தெரிய வந்தது.

  இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மீனா இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×