என் மலர்

  செய்திகள்

  திருமாவளவன்
  X
  திருமாவளவன்

  ரஜினியின் பேச்சு சங்பரிவாரின் குரலாக உள்ளது- திருமாவளவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ரஜினியின் பேச்சு சங்பரிவாரின் குரலாக உள்ளது என்று திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
  நெல்லை:

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் அறிஞர்கள், பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. இந்த வெற்றி தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.


  எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடைபெற வேண்டும். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு அறிவித்த உடன் அனைத்து கட்சி மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதைத்தொடர்ந்து அரசு அந்த முடிவை கைவிட்டு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. இதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன். தேசிய கல்வி கொள்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உள்ளது. எனவே தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் போதும் தமிழக அரசு இதேபோல் உறுதியாக இருக்க வேண்டும்.

  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து அறவழியில் அமைதியான முறையில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பா.ஜ.க. அரசு அமல்படுத்த முடியாமலும், வாபஸ் பெற முடியாமலும் முட்டு சந்தில் போய் நிற்கிறது.

  இதில் பின்வாங்க கூடாது என்று வீண் பிடிவாதம் செய்கிறார்கள். மக்கள் போராட்டம் அவர்களை பணிய வைக்கும்.

  ரஜினிகாந்த்

  எந்த ஒரு எதிர்வினையையும் தங்களது போராட்டத்தால் முதன் முதலில் தெரிவிப்பவர்கள் மாணவர்கள். மாணவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் அவர்களுக்கு அறிவுரை சொல்வது தேவையில்லாதது. சங்பரிவார் அமைப்புடன் இணைந்து செயல்படுவதை காட்டி கொள்ளவே ரஜினி திட்டமிட்டு பேசி வருகிறார். குடியுரிமை திருத்த சட்டம் குறித்த ரஜினியின் பேச்சு சங்பரிவாரின் குரலாக பார்க்கப்படுகிறது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×