search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹேக்கர்கள்
    X
    ஹேக்கர்கள்

    வீடியோ எடிட்டிங் செய்பவரின் கம்ப்யூட்டரை ஹேக் செய்த ஹேக்கர்கள்

    பரமத்திவேலூரில் வீடியோ எடிட்டிங் செய்பவரின் கம்ப்யூட்டரை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். மேலும் 980 டாலருக்கு நிகரான பணம் செலுத்தினால் மட்டுமே அழிக்கப்பட்ட தகவல்கள் திரும்ப வழங்கப்படும் என்று இ- மெயில் மூலம் எச்சரித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவில், ஹேக்கர்கள் ஸ்டூடியோ உரிமையாளர்களின் கம்ப்யூட்டர்களுக்குள் இன்டர்நெட் இணைப்பு மூலம் உள்நுழைந்து, திருமண நிகழ்ச்சி, பிறந்த நாள் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஹேக் செய்து, கம்ப்யூட்டர்களை முடக்குகின்றனர். தொடர்ந்து, இ- மெயில் மூலம் 980 டாலருக்கு நிகரான பணம் செலுத்தினால் மட்டுமே அழிக்கப்பட்ட தகவல்கள் திரும்ப வழங்கப்படும் என்று எச்சரிக்கின்றனர். இவ்வாறு பலரது கம்ப்யூட்டர்களை தொடர்ந்து, ஹேக்கர்கள் செயல் இழக்கச் செய்து வருகின்றனர்.

    இது போன்ற சம்பவம் தற்போது, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்றுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    பரமத்திவேலூரை சேர்ந்தவர் வீடியோ எடிட்டர் சண்முகம் (வயது 64). இவர், வீட்டில் கம்ப்யூட்டர் வைத்து கடந்த 30 வருடங்களாக திருமண வீடியோ மற்றும் போட்டோக்களை மற்ற ஒளிப்பதிவு கலைஞர்களுக்கு எடிட்டிங் செய்து, கொடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் ஹேக்கர்கள், இண்டர்நெட் மூலமாக இவரது கம்ப்யூட்டருக்குள் நுழைந்து, திருமண வீடியோ, போட்டோக்கள் போன்றவற்றை ஹேக் செய்துள்ளனர். மேலும், ஹேக்கர்கள், அவர்களது மெயில் முகவரியை அனுப்பி, 72 மணி நேரத்தில் தங்களை தொடர்பு கொண்டு, 980 டாலர்கள் மட்டும் கட்டினால் போதும். 72 மணி நேரத்தில் பணம் கட்டவில்லை எனில், உங்களது கம்ப்யூட்டர் முடக்கப்படும் என இ-மெயிலில் கூறி கெடு விதித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம், வக்கீல் ஒருவரிடம் இது பற்றி ஆலோசனை கேட்டார். அவர், காவல் துறையில் புகார் அளிக்கும்படி கூறினார்.

    அதன்படி, சண்முகம், வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஹேக்கர்கள், கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து தரவுகளை திருடாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட வீடியோ,போட்டோ உரிமையாளர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×