என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்- கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதிய விபத்தில் கட்டிட மேஸ்திரி உள்பட 2 பேர் பலியானார்கள்.
  தருமபுரி:

  திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளியை அடுத்துள்ள காம கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவர்களது மகன் விஜய் (வயது24). கட்டிட மேஸ்திரி. இவரது உறவினரான குமரேசன் (30). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக எதிரே பழையாவூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக குமரேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. 

  இதில் தூக்கி வீசப்பட்டதில் ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த விஜய், குமரேசன் ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை விஜய் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இந்த விபத்து குறித்து நாட்றாம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×