என் மலர்

  செய்திகள்

  முருகன்
  X
  முருகன்

  திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகனை மேலும் 5 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

  சென்னை:

  திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக செயல்பட்ட முருகனை பெங்களூரு காவல் துறையிடமிருந்து 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மதுரையில் பல இடங்களில் கொள்ளையடித்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

  நேற்று போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட முருகனை மீண்டும் 5 நாள் போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் அண்ணாநகர் போலீசார் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முருகனிடம் விசாரிப்பதற்காக இந்த மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

  Next Story
  ×