என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  சென்னை டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி - மதுரை தம்பதி மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.20 லட்சத்து 10 ஆயிரம் மோசடி செய்த மதுரை தம்பதி மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
  மதுரை:

  சென்னை திருவல்லிக்கேணி அக்பர் தெருவைச் சேர்ந்தவர் அசன் அலி (வயது 61). டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த இவர் மதுரை தல்லாகுளம் குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

  சில ஆண்டுகளுக்கு முன்பு கிரானைட் குவாரி நடத்தி வரும் மதுரை அய்யர்பங்களா அய்யாவு தெருவைச் சேர்ந்த வடிவேல் கருப்பையாவுடன் பழக்கம் ஏற்பட்டது.

  அப்போது புதிய கிரானைட் குவாரி தொடங்க இருப்பதாகவும், முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகவும் கூறினர். இதனை நம்பி ரூ. 20 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தேன்.

  பணத்தை பெற்றுக் கொண்ட அவர் கிரானைட் குவாரியை தொடங்கவில்லை. பணத்தையும் திருப்பித்தர மறுத்து வருகிறார். இதற்கு அவரது மனைவி விமலா மற்றும் கரூர் குளித்தலையைச் சேர்ந்த மதியழகன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

  இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

  இந்த புகாரின் அடிப்படையில் வடிவேல் கருப்பையா, அவரது மனைவி விமலா உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×