search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    தூத்துக்குடியில் பாஜக சார்பில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம்

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது.
    முள்ளக்காடு:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. சார்பில் குடியுரிமை சட்ட திருத்த விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொகுதி அமைப்பாளர் பிரபு தலைமை வகித்தார்.

    பாராளுமன்ற அமைப்பாளர் கனகராஜ், மாவட்ட பொருளாளர் வக்கீல் சண்முக சுந்தரம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்தனகுமார், பொதுக்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மண்டல தலைவர்கள் முன்னிலை வகித்தனர். மாநகர தெற்கு மண்டல தலைவர் சின்னதங்கம் வரவேற்றார்.

    கூட்டத்தில் மாநில வர்த்தக அணி தலைவர் ராஜா கண்ணன், மாநில பிரச்சார அணி பொறுப்பாளர் மணியன், விவசாய அணி துணைத்தலைவர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் பி.எம்.பால் ராஜ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிறப்புரை ஆற்றினர்.

    இந்தியா 1947-ல் சுதந்திரம் அடைந்த பின்னர் 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டது. அதன் பின்னர் அந்த சட்டம் 5 முறை திருத்தப்பட்டது. தற்போது 6-வது முறையாக பிரதமர் மோடி அரசால் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றியுள்ளது. இது புதிய சட்டமல்ல, இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள எவருக்கும் பாதிப்பு கிடையாது.

    இந்திய எல்லையோரம் உள்ள பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற மதம் சார்ந்த நாடுகளில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வரும் அகதிகளுக்கானது. ஆனால் இதனை வைத்து பொய் கூறி அவதூறு பரப்பி தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    130 கோடி இந்திய மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்பேன் என பிரதமர் மோடி தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். மக்களிடம் சொன்னபடி தான் மோடி அரசு சட்டங்களை இயற்றி வருகிறது. ஓட்டுக்காக இல்லாமல் நாட்டுக்காக எதிர்கால நலனுக்காக மோடி ஆட்சி செய்கிறார்.

    அதன்படி காஷ்மீரின் 370 சட்ட பிரிவு நீக்கப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் வழக்கு தீர்வு காணப்பட்டது. காவிரி தண்ணீர் பிரச்சனைகள் முடிவுக்கு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டம் இந்திய மக்களுக்கு பாதுகாப்பு தரும்.

    இவ்வாறு அவர்கள் பேசினர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாநகர மண்டல பொதுச் செயலாளர்கள் கணேசபெருமாள், காளிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன், ரவீந்திரன், மாவட்ட வர்த்தக அணி உமரி சத்தியசீலன், முத்தையாபுரம் பரமசிவன், வக்கீல் வெற்றிவேல், மாவட்ட விவசாய அணி சிவத்தையாபுரம் ராஜேந்திரன், ஒன்றிய பொதுச்செயலாளர் முள்ளக்காடு பிரபாகர், சண்முகம், முத்துக்குமார், முருகேசன், மாவட்ட இந்து இளைஞர் முன்னணி மாதவன், அமைப்பு சார பிரிவு மாவட்ட தலைவர் தேவகுமார், செயலாளர் சந்தனகுமார், பா.ஜ.க. பொதுச்செயலாளர் சிவராமன், அத்திமரப்பட்டி இளங்கோ, ஸ்ரீனிவாஸ், கேபிள்கணேசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு மண்டல துணை தலைவர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.
    Next Story
    ×