என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  கோவில்பட்டியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவில்பட்டியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கோவில்பட்டி:

  கோவில்பட்டி புதுக்கிராமம் கோபாலபுரம் தெருவில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதுக்கிராமத்தை சேர்ந்த சுடலைமுத்து என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல சுடலைமுத்து கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார். அப்போது கோவிலில் உள்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்த போது கோவிலின் உள்ளே இருந்த உண்டியல் திருடு போயிருப்பது தெரியவந்தது. மேலும் கோவிலின் கருவறை பகுதியிலும் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் கருவறையில் இருந்த எந்த பொருட்களும் திருடு போகவில்லை. உண்டியலில் சுமார் ரூ. 8 ஆயிரம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

  எப்போதும் போக்குவரத்து அதிகமாக உள்ள மெயின் சாலையில் இருக்கும் கோவிலில் உண்டியல் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×