என் மலர்

  செய்திகள்

  நகை பறிப்பு
  X
  நகை பறிப்பு

  தாராபுரத்தில் பெண்ணிடம் நகை பறித்த கும்பலை பிடிக்க நடவடிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாராபுரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

  தாராபுரம்:

  கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணகி (53). சம்பவத்தன்று தாராபுரம் சென்றார். அங்கு அவரது அக்கா மகளை சந்தித்துவிட்டு தாராபுரம் நகர் பகுதிக்கு வந்தார். தாராபுரம் வெற்றிலை தெருவில் உள்ள உறவினர் ராமருடன் பைக்கில் சகுனி பாளையத்தில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றார்.

  சகுனி பாளையம் ரோடு தனியார் ரைஸ்மில் அருகே சென்றபோது பின்னால் பைக்கில் 3 பேர் ஹெல்மெட் அணிந்து வந்தனர் . 3 பேர் வந்த பைக் ராமர் சென்ற பைக் மீது மோதியது. இதில் கண்ணகி கீழே விழுந்தார். ராமரும் பைக்குடன் கீழே விழுந்தார். அவர்கள் சுதாரிப்பதற்குள் பட்டா கத்தியை காண்பித்து 3 பேரில் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணகியிடம் இருந்து 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

  பின்னர் ராமரும் கண்ணகியும் எழுந்து தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். இருவருக்கும் லேசான காயம் என்பதால் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை. தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மூலமும் விசாரித்து வருகிறார்கள்.

  Next Story
  ×