search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த்
    X
    ரஜினிகாந்த்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- நேரில் ஆஜராக ரஜினிக்கு சம்மன்

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் 25-ம்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இதுதொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு திரும்பும்போது கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், நிருபர்களிடம் கூறும் போது:-

    ‘தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என பேசியிருந்தார்’ என்பது குறிப்பிடத்தக்கது.  

    ஏற்கனவே சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்ட நிலையில் ரஜினிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



    Next Story
    ×