என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  திருப்பூரில் காதல் திருமணம் செய்த வாலிபர் மீது தாக்குதல்- பனியன் தொழிலாளி கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூரில் காதல் திருமணம் செய்த வாலிபரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

  திருப்பூர்:

  திருப்பூர் கருமாரம் பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் ஒரு பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். பிரகாசுக்கும் திருப்பூர் கே.பி.என். காலனியை சேர்ந்த பனியன் தொழிலாளி பால்பாண்டிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

  திருப்பூர் அணைக்காடு பகுதியில் பிரகாஷ் தனது நண்பர் ஹரிகிருஷ்ணனுடன் (20) சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பால்பாண்டிக்கும், பிரகாசுக்கும் தகராறு ஏற்பட்டது.

  இதில் ஆத்திரம் அடைந்த பால்பாண்டி தான் வைத்திருந்த கத்தியால் ஹரிகிருஷ்ணனின் கை மற்றும் நெஞ்சு பகுதியில் குத்தினார். இதனை தடுக்க முயன்ற பிரகாசை கீழே தள்ளி விட்டார். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இருவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  இது குறித்து பிரகாஷ் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பனியன் தொழிலாளி பால்பாண்டியை கைது செய்தனர்.

  Next Story
  ×