search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப் பெரியாறு அணை
    X
    முல்லைப் பெரியாறு அணை

    முல்லைபெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

    முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி குறைந்துள்ளது.
    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை கொண்டு லோயர்கேம்ப் மின்நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களை கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை குறைந்ததால் பெரியாறு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துகொண்டே வந்தது.

    பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை குறைக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். எனவே நேற்றுவரை 467 கனஅடி திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 300 கனஅடியாக குறைக்கப்பட்டது. எனவே 4 ஜெனரேட்டர்கள் மூலம் 52 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து வந்த நிலையில் அதன்அளவு குறைந்துள்ளது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 117அடியாக உள்ளது. வரத்து 157கனஅடி, திறப்பு 300 கனஅடி, இருப்பு 2087மி.கனஅடி. வைகை அணை நீர்மட்டம் 52.66 அடி, வரத்து 97 கனஅடி, திறப்பு 1190கனஅடி, இருப்பு 2360 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 46.60 அடி, வரத்து 4 கனஅடி, திறப்பு 60 கனஅடி. சோத்துப்பாறை நீர்மட்டம் 113.98 அடி, வரத்து 7 கனஅடி, திறப்பு 25 கனஅடி.
    Next Story
    ×