என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  அரசு பஸ் டிரைவர் வேலை வாங்கி தருவதாக ரூ.1 1/2 லட்சம் மோசடி- வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் அருகே அரசு பஸ் டிரைவர் வேலை வாங்கி தருவதாக ரூ.1 1/2 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருவள்ளூர்:

  செவ்வாப்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரிடம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த பொற்செல்வன் அறிமுகம் ஆனார். அப்போது பணம் கொடுத்தால் அரசு பஸ் டிரைவர் வேலை வாங்கித் தர முடியும் என்று தெரிவித்தார்.

  இதனை நம்பிய தினேஷ் குமார் ரூ.1 ½ லட்சத்தை பொற்செல்வனிடம் கொடுத்தார். ஆனால் அவர் கூறியபடி பஸ் டிரைவர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்தார்.

  இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ் குமார் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பொற்செல்வனை கைது செய்தனர்.

  மோசடியில் ஈடுபட்ட பொற்செல்வன், கடந்த நவம்பர் மாதம் போக்கு வரத்து அதிகாரிகள் போல் நடித்து வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலித்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×