என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா
  X
  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா

  விவசாயிகள் ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்ற வேண்டும் - கலெக்டர் சாந்தா தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்ற வேண்டும் என்று கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான இடு பொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவி தொகை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் மூன்று தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.6 ஆயிரம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

  தற்போது 4-ம் தவணையாக ரூ.2 ஆயிரம் பெற ஆதார் அட்டையில் உள்ளவாறு மத்திய அரசு வலைதளத்தில் பெயர் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது, எனவே, இதுவரை மூன்று தவணைகள் பெற்று, 4-ம் தவணை பெறாத விவசாயிகள் உடனடியாக தங்கள் அருகில் உள்ள பொது சேவை மையத்தினை அணுகி ஆதார் அட்டையில் உள்ளவாறு பெயரை மாற்றம் செய்து பயனடையலாம்.

  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
  Next Story
  ×