என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  கோவையில் 2 வாலிபர்கள் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் 2 வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கோவை சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (20). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக மன வேதனையுடன் காணப்பட்டார். அப்போது அவரது குடும்பத்தினர் நாகராஜிடம் விசாரித்தனர். ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் இருந்து வந்தார்.

  சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து சூலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை அன்னூர் கரியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணா என்கிற முருகசாமி (30). இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடைய வில்லை. இதனால் மனவேதனை அடைந்த சரவணா என்கிற முருகசாமி சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×