என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  ஆண்டிப்பட்டி அருகே தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  ஆண்டிப்பட்டி:

  ஆண்டிப்பட்டி அருகே உள்ள தும்மக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி மனைவி சுமதி (வயது 31). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

  சுமதி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் நைசாக வீட்டுக்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். சுமதி சத்தம் போடவே இது குறித்து வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்.

  இது குறித்து வரு‌ஷநாடு போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×