என் மலர்

  செய்திகள்

  விபத்து பலி
  X
  விபத்து பலி

  கபிஸ்தலம் அருகே லாரி மோதி சிற்ப தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கபிஸ்தலம் அருகே லாரி மோதி சிற்ப தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கபிஸ்தலம்:

  தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தை அடுத்துள்ள நல்லூர் கிராமம் கீழத் தெருவில் வசிப்பவர் இளங்கோவன் மகன் பாண்டியன் (வயது 30), சிற்ப தொழிலாளி, திருமணமானவர்.

  நேற்று காலை நல்லூரில் இருந்து சுவாமிமலை வழியாக ஆடுதுறை பெருமாள் கோவிலில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் தியாகசமுத்திரம் அருகே வந்தபோது திருவையாறில் இருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து சிற்ப தொழிலாளி பாண்டியன் இறந்தார்.

  இதுகுறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சிற்பத் தொழிலாளி மீது தலைமறைவாகி உள்ள லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

  Next Story
  ×