search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த கையெழுத்து இயக்கத்தை கனிமொழி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.
    X
    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த கையெழுத்து இயக்கத்தை கனிமொழி தொடங்கி வைத்தபோது எடுத்த படம்.

    மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது: கனிமொழி குற்றச்சாட்டு

    மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்று கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார்.
    தூத்துக்குடி :

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கையெழுத்து இயக்கம் சிதம்பரநகரில் நேற்று நடத்தப்பட்டது. வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கனிமொழி எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து பா.ஜனதா அரசு நிறைவேற்றி வருகிறது. அதன்படி தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்ட திருத்தத்துக்கு பிறகு நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவே போராட தொடங்கி உள்ளனர். இந்த அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் அரசுக்கு விரோதமானவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றனர். உதாரணமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் பங்கெடுத்தனர். அவர்களையெல்லாம் இந்த சட்டத்தின் மூலம் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லை என சுலபமாக சொல்லிவிட முடியும்.

    இந்த சட்டமானது சல்லடை போன்றது. யார் யார் அந்த சல்லடையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களை மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கும். மற்றவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை செய்யும். எனவே அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்துகொண்டு தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக கையெழுத்திட்டு அந்த கோப்புகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×