என் மலர்

  செய்திகள்

  தயாநிதிமாறன்
  X
  தயாநிதிமாறன்

  டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு: அமைச்சர் டி.ஜெயக்குமார் பதவி விலக வேண்டும்- தயாநிதிமாறன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அந்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை மீறி இதுபோன்ற செயல்கள் நடக்க முடியுமா? எனவே, தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்று தயாநிதிமாறன் எம்.பி. கூறியுள்ளார்.
  சென்னை :

  தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முதல் வருகிற 8-ந் தேதி வரை ஒரு கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் ஆகியோர் சென்னை கொண்டித்தோப்பு, சிவஞானம் பூங்கா, பெருமாள் முதலித் தெரு ஆகிய பகுதிகளில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நேற்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.அதைத் தொடர்ந்து மண்ணடி பகுதியிலும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

  இதைத்தொடர்ந்து தயாநிதிமாறன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் அந்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரை மீறி இதுபோன்ற செயல்கள் நடக்க முடியுமா? எனவே, தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும். இல்லை என்றால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×