search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூட்ரினோ ஆய்வு மையம்
    X
    நியூட்ரினோ ஆய்வு மையம்

    நியூட்ரினோ ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படும்- விஞ்ஞானி உறுதி

    தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் விரைவில் தொடங்கப்படும் என அறிவியல் கழக விஞ்ஞானி பிரவீர் அஷ்தனா தெரிவித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் வானியற்பியல் மையத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்த விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் நியூட்ரினோ ஆய்வு குறித்தும் அதற்கான சந்தேகங்கள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் அறிவியல் திட்டதலைவர் பிரவீர் அஷ்தனா விளக்கம் அளித்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விஞ்ஞானி பிரவீர் அஷ்தனா

    நியூட்ரானையும், நியூட்ரினோவையும் இணைத்து மக்களிடையே அச்சம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நியூட்ரான் அணுக்கதிர் ஆபத்தானது. ஆனால் நியூட்ரினோ ஆபத்தில்லாத கதிர். அதே சமயம் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தில் புதிதாக நியூட்ரினோவை உருவாக்க போவதில்லை. மாறாக உள் வரும் நியூட்ரினோவை ஆய்வு செய்து எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் வாய்ப்புகளே முன்னெடுக்கப்பட உள்ளது.

    நியூட்ரினோ ஆய்வு மையத்துக்காக ஊட்டியில் உள்ள பைக்காரா என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அங்கு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு ஆய்வகம் அமைக்கப்படவில்லை. எனவே தமிழக மக்களின் அச்சத்தை போக்கி விரைவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் கண்டிப்பாக தொடங்கப்படும். உலகின் முன்னோடி திட்டமான இதனை சரியாக பயன்படுத்தாமல் 4 ஆண்டுகள் வீணடிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கொடைக்கானல் வானியற்பியல் ஆய்வக விஞ்ஞானி செல்வராஜ் எபினேசர் மற்றும் இந்திய அறிவியல் தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×